Thursday, January 21, 2010

To create Invisible drive

ஒரு குறிப்பிட்ட டிரைவை My Computer லிருந்து மறைய வைக்க ஒரு டிரிக்..,


Start சென்று Run -ல் 'Regedit ' என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

இதில் கீழ்கண்ட லொகேஷனுக்கு செல்லவும்.

HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer

அதில் 'Explorer' ல் ரைட் பட்டன் கிளிக் செய்து New மற்றும் "DWORD Value" ஐ தேர்வு செய்து அதற்கு 'NoDrives' என பெயரிடவும்.



பிறகு NoDrive ஐ இரண்டு முறை கிளிக் செய்து, அதனுடைய Properties ல் 'Base Unit ல் Decimal ஐ தேர்வு செய்யவும்.


பிறகு எந்த டிரைவை மறைக்க வேண்டுமோ அதனுடைய வேல்யூவை கொடுக்கவும்.

A: 1
B: 2
C: 4
D: 8
E: 16
F: 32
G: 64
H: 128
I: 256
J: 512
K: 1024
L: 2048
M: 4096
N: 8192
O: 16384
P: 32768
Q: 65536
R: 131072

S: 262144
T: 524288
U: 1048576
V: 2097152
W: 4194304
X: 8388608
Y: 16777216
Z: 33554432
All: 67108863


நீங்கள் உங்களுடைய 'E' டிரைவை மறைக்க விரும்பினால் வேல்யூ - 16 என்று கொடுக்கலாம். இதில் சிறப்பான ஒரு செய்தி என்னவென்றால், ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவ் களை மறைக்க வேண்டுமெனில் அதனுடைய மதிப்பை மட்டும் கூட்டினால் போதுமானது. உதாரணமாக 'E' ஐயும் 'G' டிரைவையும் மறைக்க மதிப்பு -80, அதாவது 64+16.


இப்பொழுது உங்கள் கணினியை Restart செய்ய வேண்டும். அவ்ளோதான்!

உங்கள் டிரைவ் மறைந்து விடும்.

மறுபடியும் தோன்ற வைக்க Registry -ல் அந்த குறிப்பிட்ட Key Value ஐ 0 ஆக மாற்றினாலோ அல்லது அந்த Key ஐ Delete செய்தாலோ போதுமானது.

குறிப்பு:

உங்கள் 'C' (System Drive) டிரைவை மறைக்க முடியாது


Monday, January 18, 2010

harddisk

நாம் புதிதாக மடிகணினி வாங்கும் பொழுது, வழக்கமாக அதில் விண்டோஸ் 7 அல்லது விஸ்டா இயங்குதளம் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும். இப்படி வாங்கிய மடிக் கணினிகளில் பல பேருக்கு ஏற்படுகின்ற சிக்கல் ஒன்று உண்டு. நம்மில் பலர் டெஸ்க் டாப் கணினிகளில் அதிகமாக பயன்படுத்தி பழக்கப்பட்டவர்கள், அதில் நமக்கு தேவையான கோப்புகளை நமது வசதிக்கு ஏற்றவாறு D,E,F என எந்த பார்ட்டிஷன்களிலும் வைத்துக் கொள்வது வழக்கம்.

ஆனால் பல மடிக்கணினிகளில் வன்தட்டின் கொள்ளளவு 320GB / 500GB என எவ்வளவு இருந்தாலும், இரண்டு பார்ட்டிஷன்கள் மட்டுமே இருக்கும், அதிலும் ஒன்று (C) இயங்குதளத்திற்கும் மற்றொன்று (D) ரெகவரிக்கும் மட்டுமே இருக்கும். அந்த 'ரெகவரி பார்ட்டிஷனை தொடாதே' என எச்சரிக்கை வேறு ஒருபுறம் பயமுறுத்தும். என்ன செய்வது நாமோ D for DATA, G for Games என பழக்கப்பட்டவர்கள். இதற்கு தீர்வாக பார்ட்டிஷன் மேஜிக் போன்ற பல மென்பொருட்கள் இருந்தாலும், விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் உள்ளிணைக்கப் பட்டுள்ள வசதியை பயன்படுத்தி,ஏற்கனவே உள்ள C பார்ட்டிஷனின் அளவை குறைத்து, புதிதாக ஒரு பார்ட்டிஷனை எப்படி நிறுவுவது எனப் பார்க்கலாம்.

விண்டோஸ் 7 / விஸ்டாவில் ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து Control Panel சென்று சர்ச் பாக்ஸில் Partition என டைப் செய்து வரும் லிங்கில் Disk Management திரையை திறந்து கொள்ளுங்கள்.



Disk Management திரையில் நீங்கள் சுருக்க விரும்பும் பார்ட்டிஷனை (உதாரணமாக C Drive) வலது கிளிக் செய்து “Shrink Volume” ஐ கிளிக் செய்யுங்கள்.



இனி திறக்கும் Shrink C: என்ற வசனப் பெட்டியில் அந்த பார்ட்டிஷனை எவ்வளவு சுருக்க வேண்டும் என்பதை MB -யில் கொடுக்க வேண்டும். உதாரணமாக 100 GB அளவுள்ள பார்ட்டிஷனை 80 GB அளவாக சுருக்க Enter the amount of space to shrink in MB என்பதற்கு நேராக 20000 என கொடுக்க வேண்டும்.


பிறகு Shrink என்ற பொத்தானை அழுத்தினால் போதுமானது.

இனி உங்கள் வன் தட்டில் Unallocated பார்ட்டிஷன் ஐ வலது கிளிக் செய்து புதிய பார்ட்டிஷனை உருவாக்கிக் கொள்ளலாம்.

இதே போல பார்ட்டிஷனை விரிவு படுத்த உங்கள் வன்தட்டில் உபயோகப்படுத்தாத அதிகப்படியான இடம் இருந்தால் Shrink Volume க்கு முன்னதாக உள்ள Extend Volume எனும் வசதியை தேர்வு செய்து தேவையான பார்ட்டிஷனை விரிவு படுத்தலாம்.

USB டிரைவ்-. NTFS

NTFS File சிஸ்டம் என்பது அதிக பாதுகாப்பும், வேகமும் கொண்டதாகும்.

ஆரம்ப காலங்களில் விற்பனைக்கு வந்த USB டிரைவ்கள் குறைந்த கொள்ளளவு கொண்டதாக இருந்தது. எனவே அதற்கு NTFS File சிஸ்டம் தேவைப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது சந்தையில் விற்பனைக்கு வருகின்ற USB Drive கள் அதிக கொள்ளளவு கொண்டதாக உள்ளதால் இதனை NTFS File system மூலம் ஃபார்மேட் செய்வது பாதுகாப்பானதாகும்.

வழக்கமாக USB Drive -ஐ ஃபார்மேட் செய்ய முற்படுகையில் அதில் FAT - option மட்டுமே இருக்கும். NTFS -option - ஐ கொண்டுவர என்ன செய்ய..,

USB drive ஐ கணினியில் பொருத்துங்கள்.

My Computer - ஐ ரைட் கிளிக் செய்து Device Manager க்கு செல்லுங்கள்.

Select Disk Drives and expand

Right Click on USB drive and select Properties

Goto policies tab and select Optimize for performance and press OK

Open My Computer, Click on USB Drive and select Format Option

Now you can have NTFS option there.


NTFS enabled USB Drives are write-able only on one PC and becomes read only on all other PCs. Hence, we can read and write on our own PC and transfer files to elsewhere without any fear of virus.

My கம்ப்யூட்டர்

My computer ஐ ரைட் கிளிக் செய்து properties செல்லவும். இதில் General tab-ல் 'Registered to' கீழே முதல் வரியில் இருப்பது உரிமையாளர் பெயர், இரண்டாவது வரியில் இருப்பது நிறுவனத்தின் பெயர்.

இதை மாற்றும் வழி இதோ,

Start -> Run இதில் regedit என டைப் செய்து enter அடிக்கவும்.

ரிஜிஸ்டரி எடிட்டரில் கீழே குறிப்பிட்ட பகுதிக்கு செல்லவும்.

HKEY_LOCAL_MACHINE

SOFTWARE

Microsoft

Windows NT

CurrentVersion இல் கிளிக் செய்து வலதுபுறமுள்ள பேனில்

நிறுவனத்தின் பெயரை மாற்ற RegisteredOrganization -ஐ இரட்டை கிளிக் செய்து Value data -ல், புதிய நிறுவனத்தின் பெயரை டைப் செய்து OK கொடுக்கவும்.

உரிமையாளர் பெயரை மாற்ற RegisteredOwner ஐ இரட்டை கிளிக் செய்து Value data -ல் புதிய பெயரை டைப் செய்து OK கொடுக்கவும்.

ரிஜிஸ்டரி எடிட்டரை மூடிவிட்டு கணினியை மறுபடி துவக்கவும்.

இப்பொழுது மை கம்ப்யூட்டரை வலது கிளிக் செய்து ப்ராப்பர்டீஸ் சென்று பாருங்கள்.

மாற்றம் தெரியும்.

Bluetoohkey

விண்டோஸில் மறைந்திருக்கும் Bluetooth மென்பொருள் எதுவென்று.

Start க்கு சென்று Run -ல்

fsquirt

என டைப் செய்து என்டர் கொடுங்கள்.

இப்பொழுது Bluetooth File Transfer Wizard என்ற விண்டோ திறக்கும்.




இந்த Wizard ஐ பயன்படுத்தி உங்கள் Bluetooth device -ல் File Transfer செய்யலாம்.


சோர்ட் கட் KEY


நமது கீ போர்டில் உள்ள விண்டோஸ் கீயை நம்மில் பலர் உபயோகிப்பதில்லை. ஆனால் அதன் முழு பயன்பாட்டையும் தெரிந்து கொண்டால், அவசியம் அந்த கீயை உபயோகிப்பீர்கள் என நம்புகிறேன்.


1. விண்டோஸ் கீ - Start மெனு

2. விண்டோஸ் கீ + D - திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ்/ரிஸ்டோர் செய்ய.

3. விண்டோஸ் கீ + E - விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் ஐ திறக்க.

4. விண்டோஸ் கீ + F - விண்டோஸ் Search for files.

5. விண்டோஸ் கீ + Ctrl + F - Search for computer

6. விண்டோஸ் கீ + F1 - Help and Support Center

7. விண்டோஸ் கீ + R - Run கமேண்ட்

8. விண்டோஸ் கீ + break - சிஸ்டம் ப்ராப்பர்டீஸ்

9. விண்டோஸ் கீ + shift + M - Undo minimize all windows

10. விண்டோஸ் கீ + U - Utility Manager ஐ திறக்க.

Computer Management

Computer Management என்பது 'Services, Applications, Disk tools மற்றும் User and Group Administration' ஆகியவற்றை ஒரே குடையின் கொண்டுள்ள கருவியாகும்.

மை கம்ப்யூட்டரில் வலது கிளிக் செய்து இதில் 'Manage' கிளிக் செய்தால் 'Computer Management' என்ற விண்டோ திறக்கும். இந்த விண்டோவில் இடதுபுறமுள்ள pane ல் 'system Tools, Storage மற்றும் Services and Applications' ஆகிய பகுதிகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் கிளிக் செய்திட வலதுபுறமுள்ள pane ல் அதன் விபரங்கள் பட்டியலிடப்படும். இதில் ஒவ்வொன்றிலும் என்ன வசதிகள் தரப்பட்டிருக்கின்றன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.



System Tools:-
இந்த பகுதியில் கணினியின் கண்காணிப்பு, பயனாளர்கள் மற்றும் பயனாளர் குழுக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் சம்பந்தப்பட்ட அனைத்து கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் Shared Folders ஐ கிளிக் செய்தால் 'Shares, Sessions மற்றும் open files' ஆகிய மூன்றும் பட்டியலில் வரும். 'Shares' ஐ தேர்வு செய்தால் Network Shared Folders மற்றும் Windows Administrator ஆல் ரிமோட் அக்ஸஸ் இற்காக உருவாக்கப்பட்ட Shared Folders ஐ பார்க்கலாம். இதில் ஏதாவது குறிப்பிட்ட Folder இன் பகிர்வை நீக்க அந்த ஃபோல்டரில் வலது கிளிக் செய்து Sharing and Security யில் Share this Folder என்பதை uncheck செய்து விடுங்கள்.

Sessions என்பது தற்பொழுது உங்கள் கணினிக்கு தொடர்பிலிருக்கும் பயனாளர்கள் பற்றிய தகவல்கள், பயனாளர்களின் வகை, கணினியின் பெயர், திறந்துள்ள கோப்புகளின் எண்ணிக்கை, தொடர்பு கொண்ட நேரம் ஆகியவற்றை காண்பிக்கும். ஒருவேளை நீங்கள் எதிர்பாராத ஒரு பயனாளர் தொடர்பிலிருந்தால், அவர் இப்பொழுது உங்கள் கணினியில் எந்த ஃபோலடரிலிருந்து எந்த கோப்பை உபயோகித்துக் கொண்டிருக்கிறார் என்பதை 'Open Files' ஐ கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒரு அட்மினிஸ்டிரேட்டராக நீங்கள் அதை முடக்கவும் செய்யலாம்.

Local Users and Groups:-

உங்கள் கணினியில் உள்ள பயனாளர்கள் பற்றிய விவரங்களை அளிக்கும். புதிய பயனாளர் கணக்கு உருவாக்குவது, கணக்கை முடக்குவது, நீக்குவது, கடவுசொல்லை உருவாக்குவது, மாற்றுவது மற்றும் குறிப்பிட்ட பயனாளர் மறுமுறை லாகின் ஆகும்பொழுது கட்டாயமாக கடவுசொல்லை மாற்றும்படி கட்டளை கொடுப்பது என பல உபயோகமான கருவிகள் இருப்பதால் இது ஒன்றுக்க்கு மேற்பட்ட பயனர்களை கொண்ட கணினிக்கு மிகவும் உபயோகமானதாகும்.

Storage:-
இந்த பகுதியில் Disk Defragmenter மற்றும் Disk Management ஆகிய முக்கியமான கருவிகளும் Removable Storage கருவியும் உள்ளன.

இதில் Disk Defragmentation என்பது அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இருப்பதால் அதை இந்த பதிவில் தவிர்த்துவிடலாம்.

Disk Management ல் Partitions உருவாக்குவது மற்றும் Format மிகவும் எளிதாக செய்யலாம். இது நமது ஹார்ட் டிஸ்கில் உள்ள அனைத்து partitions மற்றும் சிடி/டிவிடி போன்ற அனைத்து வால்யூம்களையும் காண்பிக்கும். இந்த கருவியின் மூலம் Dos Command அல்லது Stratup Disk எதுவும் இல்லாமல் partition களை உருவாக்க முடியும். ட்ரைவ்களுக்கு தேவையான ட்ரைவ் லெட்டர்களையும் கொடுக்க முடியும்.



புதிய partition ஐ உருவாக்க, Unpartition Space ல் வலது கிளிக் செய்து New Partition ஐ கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான partition வகையை தேர்வு செய்து (Primary, Extended or Logical) அடுத்து வரும் திரையில் partition size, Volume Label மற்றும் partition வகை (FAT32/NTFS). Format வகையையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

எச்சரிக்கை:-
இந்த கருவியை உப்யோகிக்கும் பொழுது மிகவும் கவனமாகவும், வல்லுனர்களின் ஆலோசனையின்படியும் உபயோகிக்கவும்.
Services and Applications:-

இந்த கருவியை உபயோகித்து ஒரு குறிப்பிட்ட Service ஐ Start, Restart, Stop மற்றும் Pause செய்யலாம்.

இதிலுள்ள மற்றொரு அவசியமான (நொடியில் உங்கள் கோப்புகளை தேட..,) கருவியைப்பற்றி இந்த பதிவில் பார்க்கவும்.

விண்டோஸ் டாஸ்க் MANAGER

வழக்கமாக விண்டோஸ் எக்ஸ்பியில் Task Manager ஐ நாம் 'Not Responding' என பிழைச் செய்தி வரும்பொழுது, 'End Task' செய்வதற்கு மட்டுமே அதிகமாக பயன்படுத்துகிறோம். அதன் இன்னும் சில அவசியமான பயன்பாடுகளை இங்கு பார்க்கலாம்.

டாஸ்க் மேனேஜருக்கு செல்ல கீழ்கண்ட வழிகள் உள்ளன.
1. Ctrl + Alt + Del.
2. Ctrl + Shift + Esc
3. Task Bar-ல் காலியாக உள்ள இடத்தில் மௌசின் வலது பொத்தானை அழுத்துவதன் மூலம்.

டாஸ்க் மேனேஜரில் 'Applications, Processes, Perfomance, Networking' மற்றும் 'Users' டேபுகள் உள்ளன.

Applications:-

நமது கணினியில் தற்பொழுது இயங்க்கிக்கொண்டிருக்கும் அப்ளிகேஷன்கள் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும்.

சில சமயங்களில் ஒருசில அப்ளிகேஷன்கள் 'Not Responding' என வரும்பொழுது, இங்குள்ள பட்டியலில் அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனில் வலது கிளிக் செய்து End Task செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை ஷிப்ட் கீயை அழுத்தி தேர்ந்தெடுத்து பின் வலது கிளிக் செய்து End Task செய்யலாம்.

இந்தப் பட்டியலில் ஏதாவது ஒரு அப்ளிகேஷனை வலது கிளிக் செய்து அதில் Go to Process கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனின் EXE file -இன் மெமரி உபயோகத்தை அறிந்து கொள்ளலாம். அப்ளிகேஷன் பெயரும் exe பைலின் பெயரும் மாறுபடலாம்.

ஒரு ஃபோல்டரிலிருந்து மற்றொரு ஃபோல்டருக்கு கோப்புகளை டிராக்(Drag) செய்யும் பொழுது, அந்த இரு விண்டோக்களும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஓவர்லேப் ஆகாமல் சரியாக Tile மோடில் arrange செய்யப்பட்டிரா விட்டால் சிரமமாக இருக்கும். அதற்கு ஒரு எளிய வழி விண்டோஸில் இங்கு மட்டுமே உண்டு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விண்டோக்களை ஒன்றின்மீது மற்றொன்று வராமல் திரையில் ஒரே அளவில் வரிசைப்படுத்த, அந்த அப்ளிகேஷன்களை, Applications tab- ல் தேர்ந்தெடுத்து வலது கிளிக் செய்து 'Tile Horizontally / Vertically' என்பதை தேர்வு செய்யலாம்.

Processes:-

இந்த டேபில், நம் கணினியின் பிராசஸரையும், மெமரியையும் எந்த பிராசஸ் எவ்வளவு உபயோகிக்கிறது என்பது இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும். CPU / Mem usage - Tiltle லில் கிளிக் செய்வதன் மூலம் அஸென்டிங்/டெஸென்டிங் மாறிக்கொள்ளலாம். தேவையில்லாத அல்லது அதிக மெமரியை உபயோகிக்கும் எந்த ப்ராசஸையும் வலது கிளிக் செய்து End Process செய்யலாம்.



தற்பொழுது வரும் சில வைரஸ் மற்றும் வெர்ம்கள் ஒரு ப்ராசஸ் ஆகவே அமர்ந்து கணினியின் வேகத்தை குறைத்துவிடுகிறது. இதுபோன்ற ப்ராசஸ்களையும் இனம் கண்டு End Process செய்து விடலாம். (உதாரணம்: Svcchost, msblast.exe, Wowexec.)

வழக்கமாக நாம் மினிமைஸ் செய்யும் அப்ளிகேஷன்கள் சில சமயங்களில் RAM இல் சிறிதும் மற்றவை Virtual memory க்கு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது. virtual memory யில் எவ்வளவு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது என்பதையும் மற்றும் CPU, Mem usage தவிர பிற உபயோகங்களை டேபில் சேர்க்க View menu விற்கு சென்று Select Column கிளிக் செய்து சேர்த்துக் கொள்ளலாம்.

Performance:-

இந்த டேபில் CPU/ Memory usage ஆகியவற்றை வரைபடம் மூலம் கொடுக்கப்பட்டிருக்கும்.



டிப்ஸ்:-

தற்சமயம் உபயோகிக்காத அப்ளிகேஷன்களை மினிமைஸ் செய்வதன் மூலம் மெமெரி உபயோகத்தை கணிசமான அளவில் குறைக்க முடியும்.

Options menu -வில் Hide when minimized கிளிக் செய்து மினிமைஸ் செய்துவிட்டால், டாஸ்க் மேனேஜர் ஒரு சிறிய பச்சை நிற ஐகானாக உங்கள்
சிஸ்டம் ட்ரேயில் தெரியும். அதில் கர்சரை கொண்டுபோனால் சிபியு உபயோக சதவீதத்தை அறிந்து கொள்ளலாம்.

வோர்ட் டாகுமென்ட் RECOVREY

நாம் மைக்ரோசாப்ட் வேர்டில் ஏதாவது டாக்குமெண்டை பல பக்கங்கள் டைப் செய்து விட்டு சில சமயங்களில் சேமிக்காமலேயே வேர்டு-ஐ மூடி விடுவோம். பிறகு அந்த டாக்குமெண்ட் மறுபடி வேண்டுமே என்ன செய்வது என திண்டாடி, வேறு வழியில்லாமல், மறுபடி உக்கார்ந்து டைப் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

இப்படி சேமிக்காமல் விட்ட கோப்புகளை மறுபடி பெறுவது எப்படி?

வேர்டை திறந்து கொள்ளுங்கள். Tools மெனுவிற்கு சென்று, Options ஐ கிளிக் செய்யுங்கள். இதில் File Locations என்ற டேபை கிளிக் செய்யுங்கள். இங்கு AutoRecover files என்பதற்கு நேராக blank ஆக இருந்தால், உங்கள் டாக்குமெண்டை ரெகவர் செய்ய இயலாது. அல்லாமல், Location தரப்பட்டிருந்தால் அந்த குறிப்பிட்ட லோகேஷனுக்குச் (விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரில்) சென்று, டாகுமெண்டை திறந்துவிடலாம்.







AutoRecovery ஐ enable செய்து வைப்பது எப்பொழுதுமே பாதுகாப்பானதாகும். இதை எப்படி செய்வது.

Tools மெனுவிற்குச் சென்று Options சென்று Save என்ற டேபில் உள்ள 'Save AutoRecover info every:' என்பதை தேவு செய்து, பின் அதற்கான நேரத்தையும் (உதாரணமாக 5 நிமிடங்கள்) கொடுத்து, File Locations டேபிற்குச் சென்று AutoRecover Files ஐ கிளிக் செய்து, "Modify..." -ல் அதற்கான லோகேஷனையும் கொடுத்துவிட்டால் போதும்.




விண்டோஸ் TRICKS

நாம் அடிக்கடி உபயோகிக்கும் ப்ரோகிராம்களை ஸ்டார்ட் மெனுவில் கொண்டு வர Pin to Start Menu என்ற வசதி வலது கிளிக் Context menu வில் உள்ளது. ஆனால் நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஃபோல்டர்களை விண்டோஸ் XP மற்றும் விஸ்டாவில் ஸ்டார்ட் மெனுவில் கொண்டுவர என்ன செய்யலாம்.

Search Box இல் Regedit என டைப் செய்து ரிஜிஸ்டரி எடிட்டரை திறந்து கொள்ளுங்கள். அதில் இடது புற பேனில்

HKEY_CLASSES_ROOT\Folder\shellex\ContextMenuHandlers\
என்ற பகுதிக்குச் சென்று {a2a9545d-a0c2-42b4-9708-a0b2badd77c8} என்ற கீயை உருவாக்குங்கள், அதற்கு வேல்யு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.


அவ்வளவுதான். இனி உங்களுக்கு தேவைப்படும் ஃபோல்டரை Shift Key ஐ அழுத்தியபடி, வலது கிளிக் செய்து Pin to Start Menu என்பதை கிளிக் செய்தால், அது உங்கள் ஸ்டார்ட் மெனுவில் வந்து விடும்.


இந்த வசதி தேவியில்லை எனில், அந்த கீயை டெலிட் செய்தால் போதுமானது.

ரிஜிஸ்டரி எடிட்டரில் மாற்றம் செய்ய தயக்கமாக இருந்தால், கீழே உள்ள சுட்டிகளிலிருந்து, ரிஜிஸ்டரி கோப்புகளை தரவிறக்கி, தேவையானதை ரன் செய்து கொள்ளுங்கள்.

ஜிமெயில் TIPS

ஜிமெயில் உபயோகிப்பவர்கள் ஏதாவது ஒரு படத்தை அனுப்ப வேண்டி இருந்தால் வழக்கமாக Attachment மூலமாகவே படங்களை இணைக்கிறோம். அவ்வாறு அல்லாமல் மெயில் டெக்ஸ்ட் இன் இடையில் படங்களை இன்சர்ட் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். (நாம் பிளாக்கரில் டெக்ஸ்ட் களுக்கு இடையில் படங்களை இணைப்பது போல.. )

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். பிறகு வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள். 'Labs' என்ற லிங்கை கிளிக் செய்தால் அதில் நிறைய வசதிகள் தரப்பட்டிருப்பதை பார்க்கலாம்.


அதில் Inserting Images க்கு நேராக Enable என்பதை தேர்வு செய்து கீழே உள்ள Save Changes பொத்தானை கிளிக் செய்து சேமித்து கொள்ளுங்கள்.



வழக்கமாக ஜிமெயில் கம்போஸ் திரை கீழே உள்ள படத்திலிருப்பது போல் இருக்கும்.



Inserting Images ஐ enable செய்த பிறகு கீழே உள்ள படத்தில் இருப்பது போல காட்சியளிக்கும்.



இனி நீங்கள் தேவையான டெக்ஸ்ட் ஐ டைப் செய்யும்பொழுது இடையில் படங்களை இணைக்க Compose mail - toolbar இல் உள்ள Insert Image பட்டனை கிளிக் செய்து, தேவையான படங்களை Browse செய்து insert செய்து விடலாம்.

இதனுடைய சிறப்பம்சம், இப்படி இணைத்த படங்களை பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ இயலும்.


ஜிமெயில் TIPS

சில சமயங்களில் Gmail லில் எவருக்காவது மின்னஞ்சல் செய்யும்பொழுது, Send கொடுத்தபிறகுதான் நினைவுக்கு வரும், அதில் ஏதாவது தவறுகளோ அல்லது குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்பவேண்டிய மெயிலை வேறு எவருடைய விலாசத்திற்கோ அனுப்பிய விஷயம்.

உடனடியாக உலவியை க்ளோஸ் செய்வது, அல்லது இணைய கேபிளை நீக்குவது என டென்ஷனில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் அல்லாட வேண்டியிருக்கும். ஆனால் நீங்கள் என்னதான் செய்தாலும் மெயில் அனுப்பப்பட்டு விடும். இதற்கு ஜிமெயிலில் Undo வசதி இருந்தால் எப்படி இருக்கும்?

Google Labs வழங்கும் Undo send என்ற வசதி சில சமயங்களில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஜிமெயிலில் இந்த வசதியை உருவாக்க,

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள், பிறகு வலது மேல் மூலையிலுள்ள Settings Link ஐ கிளிக் செய்து அதில் Labs லிங்கை கிளிக் செய்து, பட்டியலில் Undo send என்பதற்கு நேராக உள்ள enable என்பதை கிளிக் செய்யுங்கள்.



இனி send கொடுத்தபிறகு வரும் confirmation செய்தியில் Undo என்ற வசதி வந்திருக்கும். இதை கிளிக் செய்தால் போதுமானது.




ஆனால் இந்த வசதி நீங்கள் மெயிலை send கொடுத்தபிறகு ஐந்து விநாடிகள் மட்டுமே உங்கள் மெயிலை தடுத்து வைக்கும். ஏற்கனவே அனுப்பப்பட்ட மெயிலை திரும்ப பெறாது. (எதுவானாலும் கணினியை அணைப்பதை விட இது நல்ல முறையாக தெரிகிறது.)

ஜிமெயில் TIP

ஜிமெயில் பயனாளர்கள் பலர் ஒரு கணினியில் மட்டுமல்லாது பல கணினிகளில் ஜிமெயிலில் பணி புரிகிறார்கள். உதாரணமாக Browsing Centre, அலுவலக கணினி, வீட்டிலுள்ள கணினி, நண்பர்கள் அல்லது உறவினர்களின் கணினி போன்றவற்றில் மின்னஞ்சல் பணிகளை முடித்த பிறகு ஞாபகமறதியால் Sign out செய்யாமல் வந்து விடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். மொத்தமாக நாம் பணி செய்த அனைத்து கணினிகளிலிருந்தும் ஒரே நேரத்தில் sign out செய்ய இயலுமா?

மேலும் நமது மின்னஞ்சல் கணக்கில் வேறு யாராவது விளையாடுகிறார்களா? என்பதையும் நாம் அறிந்து கொள்ள ஜிமெயிலில் வசதி தரப்பட்டுள்ளது.

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். Inbox இன் கீழே உள்ள Last account activity என்பதற்கு நேராக உள்ள Details என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.



இனி திறக்கும் Activity Information விண்டோவில் உங்களது கடைசி ஐந்து லாகின் விவரங்கள் தரப்பட்டிருக்கும். இதிலிருந்து உங்கள் ஜிமெயில் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய இயலும்.



மேலும் இதிலுள்ள Sign out all other sessions என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக மாற்ற கணினிகளிலிருந்து ஒரே சமயத்தில் Sign out செய்து விட முடியும்.


விண்டோஸ் usb missing

Windows XP -ல் மை கம்ப்யூட்டரில் USB ட்ரைவை காணவில்லையா? My Computer -ல் USB Drive அல்லது External Drive, Memory Card ஐ காண்பிக்க வில்லை எனில், உங்கள் இயங்குதளம் உங்கள் ட்ரைவ் லெட்டரை, ஏற்கனவே உபயோகத்தில் உள்ள ட்ரைவ் லெட்டரை கொண்டு மாற்றியிருந்தால் இப்படி நிகழ வாய்ப்பு இருக்கிறது.

மறுபடியும் தேவையான ட்ரைவ் லெட்டரைக் கொண்டு ரீ நேம் செய்வதன் மூலமாக இதனை சரி செய்யலாம்.

My Computer -ல் வலது கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யுங்கள்.


Computer Management திரையில் Disk Mangement என்பதை தேர்வு செய்யுங்கள்.



இப்பொழுது திரையில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து ட்ரைவ்களையும் அதனுடைய Healthy status ஐயும் காணலாம்.



இதில் உள்ள SONY என்ற USB Drive இன் ட்ரைவ் லெட்டரை மாற்ற, அந்த லிஸ்டில் உள்ள அந்த குறிப்பிட்ட ட்ரைவில் வலது கிளிக் செய்து Context Menu வில் “Change Drive Letters and Paths…” என்பதை கிளிக் செய்யுங்கள்.



இனி திறக்கும் டயலாக் பாக்ஸில் Change பட்டனை கிளிக் செய்யுங்கள்.



இனி ட்ராப் டவுன் லிஸ்டில் இருந்து தேவையான ட்ரைவ் லெட்டரை தேர்வு செய்யுங்கள்.


பிறகு வரும் கன்பர்மேஷன் திரையில் Yes கிளிக் செய்யுங்கள்.

விண்டோஸ் tricks

நீங்கள் Windows XP இயங்குதளம் உபயோகித்துக் கொண்டிருக்கீறீர்களா? My Computer -ல் க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா?

இதோ உங்களுக்கான தீர்வு..,

My Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder Options வசதியை க்ளிக் செய்யுங்கள்.


இனி திறக்கும் Folder Options விண்டோவில் View டேபிற்குச் சென்று, அங்கு Files and Folders இற்கு கீழாக உள்ள “Automatically search for network folders and printers” என்பதற்கு நேராக உள்ள Check Boxuncheck செய்து விடுங்கள்.



இனி My computer முன்பை விட வேகமாக திறக்கும்.


.

இப்படி இருந்த டெக்ஸ்ட் எப்புடி ஆயிடுச்சு

Thursday 24 December 2009

நம்மில் பலர் இன்னமும் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். இதில் நாம் பணிபுரியும் பொழுது வேர்டு, எக்சல் போன்றவற்றில் வேலை செய்யும் பொழுது அல்லது இணைய உலவிகளில் பணி புரியும் பொழுது, அவற்றில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக அதாவது விஸ்டா, விண்டோஸ் 7 போன்ற இயங்குதளங்களில் உள்ளது போன்று இல்லாமல் கீழே உள்ள படத்தில் உள்ளது போல இருப்பதை கவனித்திருக்கலாம்.


இப்படி உள்ள தோற்றத்தில் பணிபுரியும் பொழுது கண்கள் விரைவில் சோர்வடைந்து விடுகின்றன. இப்படி உள்ள தோற்றத்தை கீழே படத்தில் காண்பிக்கப் பட்டிருப்பது போல தெளிவாக மாற்ற என்ன செய்யலாம்.



மைக்ரோசாப்டின் ClearType Tuner PowerToy என்ற கருவி இந்த வசதியை தருகிறது. இது ஒரு Control panel applet ஆகும். இதை தரவிறக்கம் செய்து நிறுவிய பிறகு உங்கள் விண்டோஸ் கண்ட்ரோல் பேனலில் Clear Type Tuner என்ற அப்லெட் உருவாகியிருப்பதை கவனிக்கலாம். இதை ரன் செய்து தொடரும் விசார்டில் நமக்கு தேவையான வசதிகளை தேர்வு செய்து முடித்தப்பின், இது போன்ற கண்களை உறுத்தாத தோற்றத்தை பெறலாம்.




.

விண்டோஸ் எக்ஸ்பியில் பலூன் அறிவிப்பை நீக்க


கணினி உபயோகிப்பவர்களில் சிலர் தாங்கள் உருவாக்கும் கோப்புகள், வலைப்பக்கங்களிலிருந்து சேமித்து வைக்கும் கோப்புகள், படங்கள் ஆகியவற்றை அவர்களது டெஸ்க் டாப்பிலேயே சேமித்து வைத்து விடுகிறார்கள். சில சமயங்களில் திரை முழுக்க ஐகான்கள் நிரம்பி வழியும்.

இது போன்ற கோப்புகளை சில தினங்கள் கழித்து பார்க்கும் பொழுது 'இதை எதற்காக சேமித்து வைத்தோம்' என்பதுகூட மறந்து போகும். இப்படி கேட்பாரற்று கிடக்கும் கோப்புகளை அவதானித்துக் கொண்டிருக்கும் விண்டோஸ் இயங்குதளம் சும்மா இருக்குமா?

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை உபயோகிப்பவர்கள் சில சமயங்களில் "There are unused icons on your desktop" என்கிற பலூன் அறிவிப்பை கவனித்திருக்கலாம்.


இந்த பலூன் அறிவிப்பை எப்படி நீக்கலாம்?
Desktop -இல் ஐகான்கள் ஏதுமற்ற பகுதியில் வலது கிளிக் செய்து, Properties க்ளிக் செய்து Display Properties திரைக்கு வாருங்கள். இதில் Desktop டேபிற்குச் சென்று Customise Desktop பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.



இப்பொழுது திறக்கும் Desktop Items டயலாக் பாக்ஸில் General டேபில் “Run Annoying Desktop Cleanup Wizard every 60 days” என்பதற்கு நேராக உள்ள Check BoxUncheck செய்துவிடுங்கள்.



அவ்வளவுதான்! இனி மேலே குறிப்பிட்டது போன்ற பலூன் அறிவிப்பு வராது.

விண்டோஸ் 777777

விண்டோஸ் விஸ்டாவில் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்யும் பொழுது வரும் மெனுவில், நாம் அடிக்கடி உபயோகிக்கும் மென்பொருட்களை (வேர்டு, எக்ஸ்செல் போன்றவை) சேர்க்க என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம். (உதாரணமாக Notepad ஐ இணைக்க என்ன செய்யலாம்?.. இது போல எந்த ஒரு அப்ளிகேஷனையும் இணைக்க முடியும்)

இதற்கு விண்டோஸ் ரிஜிஸ்டரியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால், Start menu வில் உள்ள சர்ச் பாக்ஸில் அல்லது ரன் கமேன்டில் Regedit.exe ஐ டைப் செய்து Registry Editor ஐ திறந்து கொள்ளுங்கள்.

இங்கு,
HKEY_CLASSES_ROOT -> Directory -> Background -> shell என்ற பகுதிக்கு செல்லுங்கள்.



இதில் shell என்ற கீயில் வலது க்ளிக் செய்து திறக்கும் மெனுவில், New மற்றும் Key யில் க்ளிக் செய்யுங்கள்.



இங்கு டெஸ்க் டாப் வலது க்ளிக் மெனுவில் என்ன பெயரில் தோன்ற வேண்டுமோ, அந்த பெயரை டைப் செய்யுங்கள். (உதாரணமாக Notepad)



பிறகு, நாம் உருவாக்கிய இந்த Notepad கீயிற்கு ஒரு Command key ஐ உருவாக்க வேண்டும். அதற்கு, நாம் உருவாக்கிய Notepad என்ற கீயில் வலது க்ளிக் செய்து New மற்றும் Key ஐ தேர்வு செய்து, அதற்கு command (Lower case -இல்) எனப் பெயரிடுங்கள்.




அடுத்ததாக, நமக்கு நாம் இணைக்க விரும்பும் அப்ளிகேஷனுடைய லொகேஷனை கொடுக்க வேண்டும். இதற்கு விஸ்டாவில் எளிதான வழி, Notepad.exe என்ற கோப்பு வழக்கமாக OS நிறுவியுள்ள ட்ரைவில் Windows\system32 என்ற ஃபோல்டரில் இருக்கும். இந்த போல்டருக்கு சென்று, Notepad கோப்பை Shift + Right click செய்தால் Context மெனுவில் Copy as path என்பதை க்ளிக் செய்தால் அந்த கொப்பினுடைய path, clipboard இல் சேமிக்கப் பட்டு விடும்.



இனி Registry Editor -இல் இடது புறமுள்ள பேனில் Command key ஐ தேர்வு செய்து, வலது புற பேனில் உள்ள Default key ஐ இரட்டை க்ளிக் செய்து, காப்பி செய்து வைத்த path ஐ paste செய்யுங்கள்.



கீழே உள்ள படத்தில் உள்ளது போல இருக்க வேண்டும்.



இனி உங்கள் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்தால், மெனுவில் Notepad இணைக்கப் பட்டிருப்பதை பார்க்கலாம்.


Computer Management

Computer Management என்பது 'Services, Applications, Disk tools மற்றும் User and Group Administration' ஆகியவற்றை ஒரே குடையின் கொண்டுள்ள கருவியாகும்.

மை கம்ப்யூட்டரில் வலது கிளிக் செய்து இதில் 'Manage' கிளிக் செய்தால் 'Computer Management' என்ற விண்டோ திறக்கும். இந்த விண்டோவில் இடதுபுறமுள்ள pane ல் 'system Tools, Storage மற்றும் Services and Applications' ஆகிய பகுதிகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் கிளிக் செய்திட வலதுபுறமுள்ள pane ல் அதன் விபரங்கள் பட்டியலிடப்படும். இதில் ஒவ்வொன்றிலும் என்ன வசதிகள் தரப்பட்டிருக்கின்றன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.



System Tools:-
இந்த பகுதியில் கணினியின் கண்காணிப்பு, பயனாளர்கள் மற்றும் பயனாளர் குழுக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் சம்பந்தப்பட்ட அனைத்து கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் Shared Folders ஐ கிளிக் செய்தால் 'Shares, Sessions மற்றும் open files' ஆகிய மூன்றும் பட்டியலில் வரும். 'Shares' ஐ தேர்வு செய்தால் Network Shared Folders மற்றும் Windows Administrator ஆல் ரிமோட் அக்ஸஸ் இற்காக உருவாக்கப்பட்ட Shared Folders ஐ பார்க்கலாம். இதில் ஏதாவது குறிப்பிட்ட Folder இன் பகிர்வை நீக்க அந்த ஃபோல்டரில் வலது கிளிக் செய்து Sharing and Security யில் Share this Folder என்பதை uncheck செய்து விடுங்கள்.

Sessions என்பது தற்பொழுது உங்கள் கணினிக்கு தொடர்பிலிருக்கும் பயனாளர்கள் பற்றிய தகவல்கள், பயனாளர்களின் வகை, கணினியின் பெயர், திறந்துள்ள கோப்புகளின் எண்ணிக்கை, தொடர்பு கொண்ட நேரம் ஆகியவற்றை காண்பிக்கும். ஒருவேளை நீங்கள் எதிர்பாராத ஒரு பயனாளர் தொடர்பிலிருந்தால், அவர் இப்பொழுது உங்கள் கணினியில் எந்த ஃபோலடரிலிருந்து எந்த கோப்பை உபயோகித்துக் கொண்டிருக்கிறார் என்பதை 'Open Files' ஐ கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒரு அட்மினிஸ்டிரேட்டராக நீங்கள் அதை முடக்கவும் செய்யலாம்.

Local Users and Groups:-

உங்கள் கணினியில் உள்ள பயனாளர்கள் பற்றிய விவரங்களை அளிக்கும். புதிய பயனாளர் கணக்கு உருவாக்குவது, கணக்கை முடக்குவது, நீக்குவது, கடவுசொல்லை உருவாக்குவது, மாற்றுவது மற்றும் குறிப்பிட்ட பயனாளர் மறுமுறை லாகின் ஆகும்பொழுது கட்டாயமாக கடவுசொல்லை மாற்றும்படி கட்டளை கொடுப்பது என பல உபயோகமான கருவிகள் இருப்பதால் இது ஒன்றுக்க்கு மேற்பட்ட பயனர்களை கொண்ட கணினிக்கு மிகவும் உபயோகமானதாகும்.

Storage:-
இந்த பகுதியில் Disk Defragmenter மற்றும் Disk Management ஆகிய முக்கியமான கருவிகளும் Removable Storage கருவியும் உள்ளன.

இதில் Disk Defragmentation என்பது அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இருப்பதால் அதை இந்த பதிவில் தவிர்த்துவிடலாம்.

Disk Management ல் Partitions உருவாக்குவது மற்றும் Format மிகவும் எளிதாக செய்யலாம். இது நமது ஹார்ட் டிஸ்கில் உள்ள அனைத்து partitions மற்றும் சிடி/டிவிடி போன்ற அனைத்து வால்யூம்களையும் காண்பிக்கும். இந்த கருவியின் மூலம் Dos Command அல்லது Stratup Disk எதுவும் இல்லாமல் partition களை உருவாக்க முடியும். ட்ரைவ்களுக்கு தேவையான ட்ரைவ் லெட்டர்களையும் கொடுக்க முடியும்.



புதிய partition ஐ உருவாக்க, Unpartition Space ல் வலது கிளிக் செய்து New Partition ஐ கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான partition வகையை தேர்வு செய்து (Primary, Extended or Logical) அடுத்து வரும் திரையில் partition size, Volume Label மற்றும் partition வகை (FAT32/NTFS). Format வகையையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

எச்சரிக்கை:-
இந்த கருவியை உப்யோகிக்கும் பொழுது மிகவும் கவனமாகவும், வல்லுனர்களின் ஆலோசனையின்படியும் உபயோகிக்கவும்.
Services and Applications:-

இந்த கருவியை உபயோகித்து ஒரு குறிப்பிட்ட Service ஐ Start, Restart, Stop மற்றும் Pause செய்யலாம்.

இதிலுள்ள மற்றொரு அவசியமான (நொடியில் உங்கள் கோப்புகளை தேட..,) கருவியைப்பற்றி இந்த பதிவில் பார்க்கவும்.