My computer ஐ ரைட் கிளிக் செய்து properties செல்லவும். இதில் General tab-ல் 'Registered to' கீழே முதல் வரியில் இருப்பது உரிமையாளர் பெயர், இரண்டாவது வரியில் இருப்பது நிறுவனத்தின் பெயர்.
இதை மாற்றும் வழி இதோ,
Start -> Run இதில் regedit என டைப் செய்து enter அடிக்கவும்.
ரிஜிஸ்டரி எடிட்டரில் கீழே குறிப்பிட்ட பகுதிக்கு செல்லவும்.
HKEY_LOCAL_MACHINE
SOFTWARE
Microsoft
Windows NT
CurrentVersion இல் கிளிக் செய்து வலதுபுறமுள்ள பேனில்
நிறுவனத்தின் பெயரை மாற்ற RegisteredOrganization -ஐ இரட்டை கிளிக் செய்து Value data -ல், புதிய நிறுவனத்தின் பெயரை டைப் செய்து OK கொடுக்கவும்.
உரிமையாளர் பெயரை மாற்ற RegisteredOwner ஐ இரட்டை கிளிக் செய்து Value data -ல் புதிய பெயரை டைப் செய்து OK கொடுக்கவும்.
ரிஜிஸ்டரி எடிட்டரை மூடிவிட்டு கணினியை மறுபடி துவக்கவும்.
இப்பொழுது மை கம்ப்யூட்டரை வலது கிளிக் செய்து ப்ராப்பர்டீஸ் சென்று பாருங்கள்.
மாற்றம் தெரியும்.
Monday, January 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment